பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலிக்கு இங்கிலாந்தில் தடை!

பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலுக்கு இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-17 07:45 GMT

சீனாவின் டிக்டாக் செயலி இந்தியாவில் ஏராளமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக விளங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த செயலி உட்பட ஏராளமான சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. ஐரோப்பிய யூனியனிலும் கனடாவில் இந்த செயலிக்கு தடை உள்ளன. அமெரிக்காவில் தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த இங்கிலாந்தில் இந்த செயலி தடை செய்யப்படும் என்று நேற்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது .


மந்திரி ஆலிவர் டவுடன் இதுபற்றி குறிப்பிடும் போது "அரசாங்க தகவல்களின் பாதுகாப்பு முதன்மையானது .எனவே அரசாங்க தரவுகளை வேவு பார்க்க வாய்ப்புள்ள டிக் டாக் செயலி ,அரசாங்க கணினிகள், செல்போன்களில் தடை செய்யப்படுகிறது. நிபுணர்களின் ஆலோசனைக்கு பின்பு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது"என்றார்.





 


Similar News