இந்திய விரோத இஸ்லாமியவாத சக்திகளுக்கு நிதியுதவி அளித்து வரும் துருக்கி.!

துருக்கி இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய மையமாக உருவாகி வருகிறது.

Update: 2020-07-31 10:06 GMT

சமீப காலத்தில் செய்யப்பட்ட பாதுகாப்பு மதிப்பீட்டின்படி கேரளா மற்றும் காஷ்மீரில் உள்ள தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களுக்கு துருக்கி நிதி உதவியும் ஆதரவும் அளித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. எர்டோகன் என்ற இஸ்லாமிய தலைவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் துருக்கி இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய மையமாக உருவாகி வருகிறது.

தகவல்களின்படி , ஆக்கிரமிப்பு கொள்கைகளைக் கொண்டுள்ள துருக்கி அரசு இஸ்லாமிய உலகத்தில் தன்னுடைய "ஒட்டமான் பாரம்பரியங்களை" பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. தற்போது இது தெற்கு ஆசிய முஸ்லிம்களிடமும் தன்னுடைய செல்வாக்கை காட்ட ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பு மதிப்பீட்டை பற்றி நன்றாக அறிந்த அதிகாரிகளின் கருத்துப்படி, ஒரு மிகப் பெரிய மறு சீராய்வு நடத்தப்பட்டதாகவும் பாகிஸ்தானுடன் இணைந்து துருக்கி அரசால் ஆதரிக்கப்பட்டு வரும் இந்திய விரோத நடவடிக்கைகள் இதன்மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

தகவல்களின்படி, துருக்கி இப்போது இஸ்லாம் மாநாடுகளை இந்தியாவில் நடத்தி வருவதாகவும் அதன் மூலம் முஸ்லிம்களை தீவிரப்படுத்தி, துருக்கிக்கு மேலும் மூளைச்சலவை செய்ய அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கேரளாவில் ஒரு அரசு அதிகாரியின் கூற்றுப்படி, இந்தியாவிலிருந்து சிலர் கோட்டார் வரைக்கும் பயணம் செய்து துருக்கியிடம் பண உதவியை எதிர்பார்க்கின்றனர். வருகின்ற நிதி உதவி 40 லட்சம் வரை உள்ளது. இதன் மூலம் தீவிரமான இஸ்லாமை கேரளாவில் பரப்ப பணம் வழங்கப்படுகிறது.

இதே தகவல்களின் படி, பாகிஸ்தான் மற்றும் துருக்கி அதிகாரிகள் தான் மத வெறுப்பு பேச்சாளரான ஜாகிர் நாயக்கிற்கு பண உதவி அளித்து வருகின்றனர். இந்திய முஸ்லிம்களை தீவிரப்படுத்துவதாகவும் தூண்டி விடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள்ளார் நாயக்.

மனிதாபிமான சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பது மட்டுமல்லாமல், இதை எதிர்த்து நடக்கும் போராட்டங்களுக்கு நிதி உதவியையும் துருக்கி அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு தீவிரமான இஸ்லாமிய இயக்கத்திற்கும் துருக்கி அவ்வப்போது நிதி உதவி அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியிட்டுள்ள தகவலின்படி, துருக்கி தற்போது 'பாகிஸ்தானின் துபாய்' என மாறி விட்டது என்கின்றனர். அதாவது 2000 முதல் 2010 வரை பாகிஸ்தான் உளவு அமைப்பான ISIக்கு ஒரு பாதுகாப்பான இடமாக துபாய் இருந்ததாகவும் தற்போது அந்த இடத்தை துருக்கி பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

மேலும் தகவல்கள் UAEயில் உள்ள இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி விட்டதாகவும் முஜாகிதீன் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு தலைவர்கள் UAE யை அடித்தளமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிற்கும் UAEக்கும் இடைப்பட்ட உறவு மேம்பட்டு வருவதால் அது இந்திய விரோத நடவடிக்கைகளுக்கு முக்கியமாக மையமாக இப்போது இருப்பதில்லை.

இதில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் துருக்கி மீடியாவின் தகவல்களின்படி, காங்கிரஸ் தன்னுடைய கடல் தாண்டிய அலுவலகக் கிளையை இஸ்தான்புல் அதாவது துருக்கியின் தலைநகரத்தில் திறப்பதாக ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

முகமது யூசுப் கான் என்ற என்ற நபர் இந்த அலுவலகத்தை துருக்கியில் தலைமை தாங்குகிறார் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தன்னுடைய அலுவலகத்தில் துருக்கியில் திறக்கும் செய்தி, எர்டோகன் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்த சில நாட்களுக்குப் பிறகு வந்தது.

2019ல் இந்தியா சட்டப்பிரிவு 370 நீக்கிய போது ஐக்கிய நாடுகள் சபையில், எர்டோகன் பாகிஸ்தானை ஆதரித்தார். பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானுடன் இணைந்து நடத்திய ஒரு கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காஷ்மீரிகளின் போராட்டம், முதல் உலகப் போரின்போது துருக்கியர்கள், வெளிநாட்டு ஆதிக்கவாதிகளை எதிர்த்து நடத்திய போரை ஒத்ததாக உள்ளது என்று கூறினார்கள்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் எர்டோகனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார், இந்தியா ஜம்மு காஷ்மீரை பற்றிக் கூறும் அனைத்து விஷயங்களையும் மறுப்பதாகவும் ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் இணைந்த, தவிர்க்க முடியாத ஒரு பகுதி என்றும் உறுதி செய்தார்.

https://www.hindustantimes.com/india-news/erdogan-s-turkey-doesn-t-stop-at-kashmir-barbs-funds-radicalisation-too-official/story-Ct1HpX1q0WLW0exZx8Hv5N.html 

Similar News