UPI டிஜிட்டல் சாதனை : ஜூலை மாதம் மட்டும் ரூ .2.9 லட்சம் கோடி மதிப்புள்ள 1.49 பில்லியன் பரிவர்த்தனைகள்.!

BBPS மற்றும் IMPS டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

Update: 2020-08-03 11:38 GMT

ஒரு நல்ல செய்தியாக, UPI பரிவர்த்தனைகள் ஜூலை மாதத்தில் உச்ச பட்ச அளவாக 1.49 பில்லியனைத் தொட்டன. இந்தப் பரிவர்தனைகளின் மொத்த மதிப்பு, உச்ச பட்ச சாதனையாக 2.9 லட்சம் கோடிகளாக இருப்பதாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க அரசு பெரும் முயற்சி எடுத்து வரும் வேளையில் இது நல்ல செய்தியாகும். பல நிபுணர்களும், இதற்கான காரணமாக கொரானா பரவல் மூலம் நுகர்வோர்களிடையே ஏற்பட்ட நடைமுறை மாற்றம் என்று கூறுகின்றனர்.

கடந்த ஜூன் மாதமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அளவும் மதிப்பும் உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்தில் பரிவர்தனைகளின் அளவு 1.34 பில்லியனாகவும், அதன் மதிப்பு 2.61 லட்சம் கோடியாகவும் இருந்தது. இதற்கிடையில் NPCI மூலம் நடத்தப்படும் மற்ற டிஜிட்டல் பரிவர்தனைகளும் ஒன்று அதிகரித்தோ அல்லது கொரானா பரவலுக்கு முந்திய காலத்தை சமன் செய்து விட்டன.

தேசிய எலக்ட்ரானிக் டோல் சேகரிப்பின் (NECT) கீழ் தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டேக்ஸ் மூலம் வசூலிக்கப்பட்ட வசூல் ஜூன் மாதத்தில் ரூ. 1623 கோடி மதிப்புள்ள 87 மில்லியன் பரிவர்த்தனைகளை பதிவு செய்தது, இது ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 10 மில்லியன் பரிவர்த்தனைகளை விட எட்டு மடங்கு அதிகமாகும். பிப்ரவரியில், COVID-19 இந்தியாவை முழுமையாகத் தாக்கும் முன்பு, பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் 110 மில்லியனாக இருந்தன, வசூலிக்கப்பட்ட தொகை எப்போதும் இல்லாத அளவுக்கு 1843 கோடி ரூபாயை எட்டியது.

BBPS மற்றும் IMPS டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

Similar News