9 ரன்களை கடந்தால் கங்குலி சாதனையை முறியடிக்கும் - விராட் கோலி!

9 ரன்களை கடந்தால் கங்குலி சாதனையை முறியடிக்கும் - விராட் கோலி!

Update: 2020-02-21 05:58 GMT

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை எடுத்த இந்தியா வீரர்களின் பட்டியலில் கங்குலி தான் முதல் இடத்தில் உள்ளார். தற்போது விராட் கோலி 9 ரன்கள் எடுத்தால் அவரை பின்னுக்கு தள்ளி விடுவார்.

தற்போது இந்தியா கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று ஐந்து டி20 போட்டிகள் ,மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. இந்த நிலையில் டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. பின்னர் ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது.

இன்று முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி 9 ரன்களை கடந்தால் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்தியா வீரர்களின் பட்டியலில் கங்குலியை பின்னுக்குத் தள்ளி விடுவார்.

சச்சின் தெண்டுல்கர் 15921 ரன்களுடன் முதல் இடத்திலும், ராகுல் டிராவிட் 13265 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், சுனில் கவாஸ்கர் 10122 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், லட்சுமண் 8781 ரன்களுடனம் நான்காவது இடத்திலும், சேவாக் 8503 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். கங்குலி 7212 ரன்களுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். தற்போது விராட் கோலி 7204 ரன்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.    

Similar News