கடலுக்குள் சிக்கிய மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் மையம்- இஸ்ரோவின் புதிய உருவாக்கம்!

பேரிடர் காலங்களில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும் மையம் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Update: 2024-01-18 08:00 GMT

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடலில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளில் இருந்து செய்திகளை அனுப்புவதற்காக 'டிஸ்டிரஸ் அலர்ட் ட்ரான்ஸ்மிட்டர்' என்ற உள்நாட்டு தொழில்நுட்ப தீர்வை உருவாக்கியுள்ளது. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மூலம் செய்திகள் அனுப்பப்பட்டு மத்திய கட்டுப்பாட்டு நிலையத்தில் பெறப்படுகிறது. அங்கு மீன்பிடி படகின் அடையாளம் மற்றும் இருப்பிடத்திற்காக எச்சரிக்கை சமிக்ஞைகள் குறியிடப்படுகின்றன. பிடித்தெடுக்கப்பட்ட தகவல்கள் இந்திய கடலோர காவல் படை கீழ் உள்ள கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகிறது.


இந்த தகவலை பயன்படுத்தி ஒருங்கிணைந்து ஆபத்துள்ள மீனவர்களை காப்பாற்ற தேடுதல் மற்றும் மீட்புபணிகளை மேற்கொள்கிறது. மையம் 2010 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது வரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் வழிச் செலுத்துதலில் தொழில்நுட்பம் முன்னேற்றங்களை பயன்படுத்தி இஸ்ரோ மேம்பட்ட திறன்கள் மற்றும் இரண்டாம் தலைமுறை டி.ஏ.டி பரிணமிக்கும் அம்சங்களுடன் டி.ஏ. டி மேம்படுத்தப்பட்டுள்ளது. கடலில் இருந்து பேரிடர் எச்சரிக்கையை செயல்படுத்தும் மீனவர்களுக்கு மீண்டும் ஒப்புகை அனுப்பும் வசதி உள்ளது. இது ஆபத்தில் உள்ள மீனவர்களை மீட்பதற்கு இது பெரிதும் உதவுகிறது .


கடலில் இருந்து டிஸ்டிரஸ் சிக்னலை அனுப்புவதை தவிர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து செய்திகளை பெறும் திறனை கொண்டுள்ளது. இதை பயன்படுத்தி மோசமான வானிலை சுனாமி அல்லது வேறு ஏதேனும் அவசரகால  நிகழ்வுகள் ஏற்படும்போதெல்லாம் கடலுக்குள் சிக்கி உள்ள மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திகளை அனுப்ப முடியும் .இதனால் மீனவர்கள் தாயகம் திரும்பவோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவோ முடியும். மத்திய கட்டுப்பாட்டு மையம் 'சாகர் மித்ரா' எனப்படும் மலை அடிப்படையிலான நெட்வொர்க் மேலாண்மை அமைப்பை கொண்டுள்ளது. இது பதிவு செய்யப்பட்ட டி.ஏ.டி எஸ்ஜி யின் தரவுத்தளத்தை பராமரிக்கிறது.


பாதுகாப்பு படையினருக்கு ஆபத்தில் இருக்கும் படகு பற்றிய தகவல்களை பெறவும் ஒருங்கிணைக்கவும் உதவுகிறது. இது இந்திய கடலோர காவல் படைக்கு எந்த நேரமும் தாமதம் என்று துயரத்தின் போது தேடல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள உதவுகிறது. 24 மணி நேரமும் செயல்படும் இதற்கான மையத்தை இந்திய கடலோர காவல் படை இயக்குனர் ஜெனரல் ஸ்ரீ ராகேஷ் பால் முன்னிலையில் இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் பெங்களூரில் திறந்து வைத்தார். மேற்ண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள்  கூறினர்.


SOURCE :DAILY THANTHI

Similar News