பூமி பூஜை நிகழ்வை சிறப்பிக்க கோவில்களில் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்த இந்துக்கள் மீது தடியடி நடத்திய மம்தா அரசு!

பூமி பூஜை நிகழ்வை சிறப்பிக்க கோவில்களில் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்த இந்துக்கள் மீது தடியடி நடத்திய மம்தா அரசு!

Update: 2020-08-06 11:58 GMT

அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானுக்கு காக கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது கொண்டிருந்த அதேவேளையில் மேற்குவங்காளத்தில் பூஜையில் கலந்துகொண்ட ராம பக்தர்கள் மீது காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மேத்னிபூர் மாவட்டத்தின் கரக்பூர் பகுதியில் தான் ஒரு நாள் ஊரடங்கின் போது விதிகள் மீறி பூஜை ஏற்பாடு செய்ததாக காவலர்கள் ராம பக்தர்களை லத்தியால் அடித்து இழுத்து வந்த இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த மாதத்தில் சீரற்ற முறையில் 7 நாட்கள் தேர்வு செய்யப்பட்டு‌ அந்த நாட்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஒரு வினோதமான உத்தரவை பிறப்பித்து இருந்தது‌. இந்த ஏழு நாட்களுள்‌ ராமர் கோவில் பூமி பூஜை நடந்த ஆகஸ்ட் 5ம் தேதியும் ஒன்று. 8, 20, 21, 27, 28, 31 ஆகியவை மற்ற 6 நாட்கள். இவை ஒரு நாள் ஊரடங்கு காலங்கள் மட்டுமே என்பதால் ஆகஸ்ட் 5ஐ நீக்கி விட்டு வேறொரு நாள் ஊரடங்கு அமல்படுத்துமாறு பா.ஜ.க கோரிக்கை வைத்தது. முதல் முறை அறிவிக்கப்பட்ட பின்னர் ஏற்கனவே இரண்டு முறை தேதிகள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பண்டிகைகள் அந்த குறிப்பிட்ட தேதிகளில் வந்ததால் பல சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க அவை மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நாட்களும் ஊரடங்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. எனினும் பா.ஜ.கவின் கோரிக்கையை மம்தா அரசு நிராகரித்து விட்டது.

பூமி பூஜை நிகழ்வை ஒட்டி பா.ஜ.க மற்றும் இந்து ஜக்ரன் மன்ச் அமைப்புகள் இணைந்து கரக்பூரில் உள்ள ஜகந்நாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜையை ஏற்பாடு செய்திருந்த நிலையில் ஊரடங்கு விதிகளை பின்பற்றி பூஜையை நிறுத்துமாறு காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பூஜையைத் தொடர்ந்து நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்த காவலர் குழு ஒன்று பூஜையை நிறுத்த முயன்றதாகவும் இதனால் ஏற்பட்ட கைகலப்பில் இரு தரப்பினரும் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் பக்தர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை வலுக்கட்டாயமாக கோவிலில் இருந்து வெளியே இழுத்துச் சென்றுள்ளனர்.

இதே போன்று கரக்பூரில் தல்பகிச்சா என்ற பகுதியில் பா.ஜ.க மகளிரணி ஏற்பாடு செய்திருந்த பூஜையையும் காவலர்கள் வந்து தடுக்க முயற்சித்ததாகவும் இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் பெண்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

கரக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல இடங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்ததாகவும் பக்தர்கள் மீது தடியடி நடத்தியதுடன் பூஜைக்காக பயன்படுத்தப்பட்ட ஒலி பெருக்கி உள்ளிட்ட பொருட்களையும் காவல்துறையினர் அகற்றியதாகவும் கூறப்படுகிறது.இது குறித்த பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

கீழே இருக்கும் ட்வீட்டில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் பெண்கள் மீது காவல்துறை தடியடி நடத்துவதைக் காணலாம்.

இந்த வீடியோவில் "ஜெய் ஸ்ரீராம்"என்று கோஷமிடும் பக்தர்களைத் தாக்குவதோடு அவர்களை வலுக்கட்டாயமாக கோவிலில் இருந்து வெளியேற்றி கோவிலையும் இழுத்து மூடியதாக கூறப்படுகிறது.

நன்றி : Opindia

Similar News