இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கையால் புலம்பி தள்ளும் இலங்கை - நடந்தது என்ன ?

இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கையால் புலம்பி தள்ளும் இலங்கை - நடந்தது என்ன ?

Update: 2020-11-06 19:00 GMT

அக்டோபர் 28 ஆம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இலங்கைக்கு வருகை தந்தார். அவரின் வருகைக்கு பிறகு "India First" (இந்தியா முதல்) என்னும் பாதுகாப்பு கொள்கையை இலங்கை முதல் முறையாக வெளியிட்டது. "நான் ஆட்சியில் இருக்கும் வரை, இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே கூறியதாக அந்நாட்டின் வெளியுறவு செயலாளர் ஜெயந்த் கொலம்பஜே கூறினார். 

அதே போக்கில், "ஆசியா சங்கம்" என்ற வெப்பினரில், "இந்தியாவின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம், நாங்கள் ஒரு போதும் இந்தியாவிற்கு பாதுகாப்பு அம்சங்களில் தொல்லை கொடுக்க மாட்டோம், கொடுக்கவும் முடியாது. அதே வேளையில் இந்தியாவும் இலங்கை நாட்டை குறைந்து மதிப்பிடக்கூடாது என்ற செய்தியைப் பதியவைக்க வேண்டியது அவசியம்" என்று கூறினார்.

வெபினாரில் இலங்கை வெளியுறவு செயலாளர், ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா சம்பந்தப்பட்ட நான்கு நாடுகளின் "Quad" குறித்து இலங்கையின் கவலையை வெளிப்படுத்தினார். "குவாட்டில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம். உண்மையில் ஒரு குவாட் தேவையா? இந்தியப் பெருங்கடலில் யுத்தத்தை உருவாக்க கூடியது. இவை எங்கள் கவலைகளில் சில” என்று அவர் கூறினார்.

இந்தியப் பெருங்கடலில் ஒரு முக்கிய பகுதியில் இருக்கும் இலங்கையிடம் குவாட் உருவாவதைப் பற்றி ஆலோசிக்கவோ அல்லது தெரிவிக்கவோ இல்லை என்பது வருத்தத்திற்குரியது என்று கூறினார். "பெரிய நாடுகள் அனைத்தையும் ஒன்று சேர்ந்து எங்கள் இடத்தல் விளையாடுகிறீர்கள், அது முதலில் எங்களை தான் காயப்படுத்தும்" என்றார். "இந்த வல்லரசுகள் விளையாட்டில் நாங்கள் அகப்பட விரும்பவில்லை" என்றார்.

Similar News