கொரோனாவை எதிர்க்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை என்ன.?

கொரோனாவை எதிர்க்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை என்ன.?

Update: 2020-07-01 02:33 GMT

கொரனோவின் கோரபற்களில் உலகம் மாட்டியிருக்கும் வேளையில் அனைவரும் அவரவர் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பெறத்துவங்கியிருக்கிறார்கள். காரணம் இன்றைய சூழலில் ஆரோக்கியம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று . யார் ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை சூழலை கடைப்பிடிக்க தவறுகிறார்களோ அவர்களுக்கு கோரனோ மட்டுமல்லா எல்லா விதமான நோய் தொற்றும் எளிதில் ஏற்படும்.

எனவே ஊட்டசத்து மிகுந்த உணவினை உட்கொள்வதும் வலிமையான எதிர்ப்பு சத்தியை உருவாக்கும் உணவினை உட்கொள்வதும் அவசியமாகும். எனவே ஒருவர் நல்ல உணவு முறை தேவையான உறக்கம் இந்த இரண்டையும் சமநிலையில் உட்கொள்வது மிக அவசியம்.

இதில் முதல் படியாக கடைப்பிடிக்க வேண்டியது. காலை உணவை தவிர்க்காமல் இருப்பது. கூடுதலாக கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த பொருட்களிடமிருந்து தள்ளியிருப்பதும் எண்ணெய் பொருட்களை தவிர்ப்பதும் ஆரோக்கிய சூழலை உடலுக்கு வழங்கும்.

பாதிப்புகளை உண்டாக்கும் தொற்றுக்களிடம் இருந்து நம்மை காப்பாற்றும் அபத்பாண்டவராக இருப்பது பழங்கள் தான். எனவே ஒவ்வொறு உணவு வேளையின் போதும் போதுமான பழங்களை எடுத்து கொள்வதை வழக்கமாக கொள்ளுங்கள். சிட்ரஸ் பழங்கள் என்று அழைக்கப்படும் ஆரஞ்சு, திராட்சை, எலும்பிச்சை, சாத்துகொடி ஆகிய பழங்களில் இருக்கும் ஊட்ட சத்து சளி மற்றும் சளி சார்ந்த வைரஸ்களிடமிருந்து நம்மை காக்க பெரிதும் உதவும். மேலும் ஒருவரின் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க விட்டமின் சி பெரிதும் உதவுகிறது.

மேலும் எந்த மனிதர் 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்து உறங்குகிறாரோ அவருக்கு எதிர்ப்பு சக்தி இயல்பாகவே சமநிலையில் இருக்கும். காரணம் ஒருவர் ஆழ்ந்து உறங்குகிற போது அவருடைய வேளை பளு, மன அழுத்தம் ஆகியவற்றில்லிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள். யாரால் தூக்கம் என்கிற அடிப்படை செயல்முறையை சிறப்பாக கையாள முடியவில்லையோ அவர்களுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது காரணம் அவர்களிடம் இருக்கும் குறைவான எதிர்ப்பு திறன்.

எனவே அச்சுருத்தல் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில் தனிமனித ஆரோக்கியமே இன்று ஒட்டு மொத்த சமூகத்தின் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். காரணம் இன்று நாம் பராமரிக்கும் ஆரோக்கியமே நம் பொருளாதாரத்தையும் நாட்டின் வளர்ச்சியையும் இனி வரும் காலங்களில் மேம்படுத்த இருக்கிறது.  

Similar News