பாகிஸ்தான் இந்துக் கோவில் இடிப்பு - நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு?

பாகிஸ்தான் இந்துக் கோவில் இடிப்பு - நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு?

Update: 2021-01-01 17:05 GMT

பாகிஸ்தானின் கைபர் பத்துக்வாவின் கராக் மாவட்டத்தில் அண்மையில் ஒரு ஹிந்து கோவில் 1500 பேர் கொண்ட கும்பலால் சூறையாடி அழிக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு பாகிஸ்தானிடம் முறையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இதுகுறித்து ANI செய்திகள் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விவகாரம் பாகிஸ்தானிடம் அதிகாரபூர்வமாக இந்தியா எடுத்துச் சென்றது என்றும், இந்த வன்முறைக்கு எதிராக ஒரு வலுவான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது .

​  ​​

 பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான கராக்  நகரில் உள்ள தெரி கிராமத்தில் உள்ள கிருஷ்ண துவாரா கோவிலுடன், ஸ்ரீ பரமன் ஜி மகாராஜின் சமாதி புதன்கிழமை 1500 பேர் கொண்ட இஸ்லாமியவாத கும்பலால் அழிக்கப்பட்டது.

 இந்த கோவில் கூடுதல் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக இந்த கும்பல் குற்றம்சாட்டியது. இச்செய்தி சமூகவலைதளங்களில் பரவி பாகிஸ்தானுக்கு கடும் அவப்பெயரை ஏற்படுத்தி தந்தது. இதற்கு பிறகு இந்த தாக்குதல் தொடர்பாக டஜன் கணக்கான நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த கோயில் மீதான தாக்குதலில் சுமார் 1500 பேர் பங்கேற்றனர் .

தெரி கிராமத்தின் இந்த ஹிந்து கோவில் மீதான தாக்குதல் குறித்து பாகிஸ்தானின் தலைமை நீதிபதி குல்சார் அஹமது வியாழக்கிழமை தானாகவே இந்த வழக்கை முன்னெடுத்து எடுத்துக் கொண்டதை அடுத்து இந்த கைதுகள் ஏற்பட்டுள்ளன. வியாழக்கிழமை கராச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ரமேஷ் குமார் என்பவர் இந்த கோயில் சூறையாடப்பட்டது குறித்து புகார் அளித்தார். இதற்குப் பிறகு தலைமை நீதிபதி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஜனவரி 5ஆம் தேதி விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 பாகிஸ்தானின் மத விவகார அமைச்சர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். ஹிந்து சமூகத்தின் பிரதிநிதியான வழக்கறிஞர் ரோகித் குமார் கூறுவதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ள தகவல்களின் படி,  எழுப்பப்பட்டிருந்த ஹிந்து கோவில் ஏற்கனவே அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட அதிகமாக எதையும் ஆக்கிரமிக்கவில்லை என்று தெரிவித்தார். அந்த கிராமத்தில் இந்துக் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஹிந்துக்கள் போராட்டம் செய்ததாக கூறப்படுகிறது.

 இந்த கோவில் 1997 ஆம் ஆண்டில் முதன்முதலாக தாக்கப்பட்டு இடிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு பிறகு உள்ளூர் சமூகம் இந்த கோயிலை புதுப்பிக்க ஒப்புக்கொண்டது. கோயிலின் புனரமைப்பின் போது ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பாக ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இது பிரச்சினைக்கு வழி வகுத்து. இப்பொழுது மறுபடியும் சூறையாடப்பட்டுள்ளது.

 இந்த கோவில் குரு ஸ்ரீ பரமன் தயால் 1919 ஆம் ஆண்டில் இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு அங்க ஒரு கோவில் கட்டப்பட்டது.

 பாகிஸ்தானில் இந்து, சீக்கிய வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டும், இந்து, கிறிஸ்தவ, சீக்கிய பெண்களின், சிறுமிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமல் இருப்பதும் இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்தது. நாளுக்கு நாள் இந்த அட்டூழியங்கள் அதிகரித்து வருவதால் இந்திய அரசு வெளிப்படையாக பாகிஸ்தானிடம் பிரச்சனைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக உருவாகியுள்ளது.

Similar News