மரணம் என்கிற நிகழ்வு ஒரு பெரும் ரகசியமாகவே இருப்பது ஏன்? மரணத்தை கண்டு அச்சம் ஏன்?

மரணம் என்கிற நிகழ்வு ஒரு பெரும் ரகசியமாகவே இருப்பது ஏன்? மரணத்தை கண்டு அச்சம் ஏன்?

Update: 2020-07-28 02:11 GMT

பெரும்பாலும் மரணம் குறித்த பயம் அனைவருக்கும் உண்டு. வெகு சிலரே அதை மிக இயல்பாக கடந்து போய்விடுகின்றனர். மரணம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவதே அனைத்தும் முடிந்துவிடப்போகிறது. நம் வாழ்கை முடிவுக்கு வரப்போகிறது என்கிற சிந்தனையே அனைத்து பயத்திற்கும், பிரச்சனைக்குமான ஆணிவேர் எனலாம். காரணம் பெரும்பாலனவர்களுக்கு தங்களின் பிரச்சனைகள், துன்பங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்ற விருப்பமே தவிர, அவர்களுக்கு தங்கள் வாழ்க்கை முடிவுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் இல்லை.

ஆனால் மரணம் என்பது ஒரு தனித்துவமான இயற்கை நிகழ்வு. ஓர் ஆன்மா தன் உடல் ரீதியான வடிவத்தை இழந்து அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர அரம்பிக்கும் ஒரு புள்ளி.

நாம் மரணத்தை கண்டு அச்சமுற மற்றொரு காரணம், பினைப்பு. நாம் பெரும்பாலும் நம் வாழ்வின் அனைத்துடனும் பிணைந்து இருக்கிறோம். நம்மால் எந்தவொன்றிலுமிருந்தும் நம்மை விடுவித்து கொள்ள இயலவில்லை. நமக்கு கிடைத்திருக்க கூடிய இந்த வாழ்வு வெறும் தற்காலிகமானது என்று தெரிந்திருந்தும்,இது நிரந்திரம் என்பது போன்ற மாயையிலேயே பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் நம் வாழ்வின் நோக்கம் என்ன? நம் பிறப்பின் நோக்கம் என்ன? என்பதை நாம் யாரும் உணர்ந்து கொள்வதில்லை. வாழ்கை நம்மை இழுத்து செல்லும் வேகத்தில் நாம் வந்த நோக்கத்தை உணராமலேயே அதன் போக்கில் வாழ துவங்கிவிடுகிறோம்

மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. இந்த மர்மம் தான் அனைவரையும் மரணம் குறித்து அச்சம் கொள்ள வைக்கிறது. மரணத்திற்கு பிறகு சொர்கம்,நரகம் என ஆயிரம் விஷயங்கள் சொல்லப்பட்டாலும் ஆதற்கான ஆதாரங்களோ சாட்சியங்களோ இல்லை.

மரணத்தில் இருக்கும் பதிலற்ற புதிரே அது குறித்த எதிர்பார்ப்பை அனைவரிடத்திலும் அதிகரிக்க செய்கிறது. இதில் அச்சம் என்பதை தாண்டி நமக்கிருக்கிற பெரும் துயரே, நம் மனதிற்கு நெருக்கமானவர்களின் மரணம் தான். அந்த பிணைப்பு, நம்மை அச்சமுற செய்கிறது.

இவைகளை தாண்டி இந்த அச்சத்திலிருந்து வெளியேற ஒரே வழி, நம் ஆன்மாவை நாம் உணர்தல் ஒன்றே. அது தியானம், முறையான குருவை அடைந்து அவர் வழி நடத்தல், நம் பிறவி பயனை உணர்தல் ஆகியவற்றின் மூலமே சாத்தியம்.  

Similar News