பல சாட்டிலைட் சேனல்களே இருந்தும் Youtube சேனல்களுக்கு பயப்படுகிறதா தி.மு.க? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

பல சாட்டிலைட் சேனல்களே இருந்தும் Youtube சேனல்களுக்கு பயப்படுகிறதா தி.மு.க? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

Update: 2020-07-31 07:47 GMT

திராவிட முன்னேற்ற கழகம், இன்றைய தேதியில் தமிழகத்தின் எதிர்கட்சி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் 38 இடங்கள் வெற்றி கண்ட கட்சி. சொந்தமாக சாட்டிலைட் சேனல்கள், தின பத்திரிக்கைகள், வார பத்திரிக்கைகள் என சொந்தமான அச்சு இதழ்கள், பண்பலை மற்றும் எண்ணற்ற சமூக வலைதள கணக்குகள் என ஒரு மாபெரும் ஊடக சாம்ராஜ்யத்தையே கையில் வைத்துள்ளது.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள், பல கோடிகள் செலவு செய்து வாடகைக்கு தன்னையும், கட்சியையும் பிரபலபடுத்த ஸ்டாலின் வைத்திருக்கும் ஐ-பேக் எனப்படும் தனியார் வட இந்திய நிறுவனம், போதாக்குறைக்கு கட்சியின் கரைவேட்டி உடன்பிறப்புகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இவ்வளவு பேர் இருந்தும் இரண்டு யூ ட்யூப் சேனல் மற்றும் இரண்டு ட்விட்டர் கணக்கிற்கு தி.மு.க பயந்து சட்டத்தின் பக்கம் புகார் கொடுக்க ஒதுங்குகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இல்லை என்றால் அதுதான் உண்மை.

மேற்கூறிய கட்டமைப்பு அனைத்துமே தி.மு.க-வில் பலம் வாய்ந்ததாக காட்டி கொண்டாலும் அவை ஜோடிக்கப்பட்டவையே. மேலும் தி.மு.க பயப்படக்கூடிய இரண்டு யூ ட்யூப் சேனல்கள் மாரிதாஸின் "மாரிதாஸ் ஆன்ஸர்ஸ்" ஒன்று மற்றொன்று மதன் ரவிச்சந்திரனின் "சேனல் விஷன்". இவை இரண்டின் மீதும் அதிகார ஏவலை தி.மு.க தொடர்ந்திருக்கிறது. காரணம் மாரிதாஸ் தொடர்ந்து வீடியோக்கள் மூலம் மக்களை தி.மு.க-வை எதிர்த்து திருப்புவதாகவும், மதன் ரவிச்சந்திரன் திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் மான்கறி வேட்டையாடிது தி.மு.க மேல்மட்ட தலைவர்களுக்கு என வீடியோ போட்டதால் அவர் மீதும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தேதியில் மாரிதாஸின் யூ ட்யூப் சேனல் 3 லட்சத்து 63 ஆயிரம் பின் தொடர்பவர்களையும், மதன் ரவிச்சந்திரனின் யூ ட்யூப் சேனல் 1 லட்சத்து 63 ஆயிரம் பின் தொடர்பவர்களையும் கொண்டுள்ளது. இவர்கள் முழுவதுமே பார்வையாளர்களாக எடுத்துக்கொண்டால் தமிழக மக்கள் தொகையில் 1 சதவீதம் கூட வராது. ஆனால் இவர்களது வாதங்களும், விவாத வீடியோக்களும் தி.மு.க-வின் அஸ்திவாரத்தையே அசைக்கிறது என்கிற பயத்தால் தானே இன்று சட்டத்தின் வாசலை நோக்கி ஓடியிருக்கிறார்கள் தி.மு.க-வினர்? அந்த அளவிற்கா தி.மு.க-வின் பேஸ்மண்ட் வீக்காக இருக்கிறதா என சமூக வலைதளங்களில் கேள்விகள் அனல் பரக்கின்றன.

அது போகட்டும் இதுவே யூட்யூப் சேனல் வீடியோவின் மூலமாக அவதூறு என்று பயந்து சட்டதின் முன் அடைக்கலம் தேடி ஒளிந்தீர்கள் சரி, இரண்டு ட்விட்டர் கணக்குகளா உங்களை அசைத்து பார்த்தது என்று சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.

ஒன்று கல்யாண் அவர்களின் ட்விட்டர் கணக்கு, மற்றொன்று கிஷோர்.கே.சாமி அவர்களின் ட்விட்டர் கணக்கு. கிஷோர் ட்விட்டரை தொடர்பவர்கள் 57 ஆயிரம் பேர், கல்யாண் அவர்களை பின் தொடர்பவர்கள் 18 ஆயிரம் பேர் இன்றைய தேதிக்கு. ஆக மொத்தம் 75 ஆயிரம் ட்விட்டர் பயனீட்டாளர் தொடர்பில் உள்ள இரண்டு கணக்குகளா உங்கள் அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்துள்ளது என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

நடக்கும் நிகழ்வுகளின் மூலம் தி.மு.க சட்டத்தின் அடைக்கலத்தை தேடி ஓடி சென்றதை வைத்து தி.மு.க என்பது மாய பிம்பம், யார் வேண்டுமானாலும் அசைத்து சாய்த்து விட முடியும், கருத்துக்கள் அதனின் வேர்கள் என்பது பழைய கணக்கு தற்பொழுது காசுக்காக தான் ஆட்கள் என்பது புதுகணக்கு என்பதை தற்போதைய தலைவர் ஸ்டாலின் உலகுக்கு சொல்லிவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Similar News