மாநிலங்களவைத் தேர்தலில் நான்கு இடங்களில் YSRCP வேட்பாளர்கள் வெற்றி.!

மாநிலங்களவைத் தேர்தலில் நான்கு இடங்களில் YSRCP வேட்பாளர்கள் வெற்றி.!

Update: 2020-06-20 02:09 GMT

காலை 9 மணிக்குத் துவங்கி மாலை 4 மணி வரை நீடித்த மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு காலியிடங்களிலும் ஆந்திர முதல்வர் ஜகன் மோகன் ரெட்டியின் YSRCP கட்சியைச் சேர்ந்த 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பரிமள் நாத்வானி, மூப்பிதேவி வெங்கட்ரமணா, பில்லி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அல்லா அயோத்திய ராமி ரெட்டி ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் YSRCP கட்சி தற்போது ஆந்திராவில் பலம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு அவசியம் ஏற்படாமல் போய் இருக்கும். ஆனால் 23 எம்எல்ஏக்களை கொண்ட தெலுங்கு தேசம் கட்சி பொதுச்செயலாளர் வரலா ராமையாவை நிறுத்தியதால் YSRCP வேட்பாளர்கள் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு பறிபோனது. எனினும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 3 பேர் சொந்த கட்சியை புறக்கணித்து YSRCP வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டளித்ததாக கூறப்படுகிறது.

மொத்தமுள்ள 175 ஓட்டுகளில் 173 ஓட்டுக்கள் போடப்பட்ட நிலையில் ஒவ்வொரு YSRCP வேட்பாளரும் 38 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நான்கு தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏக்களின் ஓட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் வேட்பாளர் ராமையா 17 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

Similar News