ஆப்கானிஸ்தானில் பப்ஜி, டிக் டாக் தடை - தலிபான்கள் நடவடிக்கை!
ஆப்கானிஸ்தானில் பப்ஜி மற்றும் டிக் டாக் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலைப்பான்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தது முதல் அவர்கள் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்கள். இந்நிலையில் உள்ள விழாவில் பிரபலமான பப்ஜி மற்றும் டிக் டாக் ஆகிய இரண்டு செயலிகளின் பயன்பாட்டிற்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தலிபான்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு செயலிகள் முற்றிலும் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டதாக கூறிய தலிப்பான்கள் இன்னும் 90 நாட்களுக்குள் இரு செயல்களிலும் தடை விதிக்கப்பட்டு அவை முற்றிலும் பயன்படுத்தாத முடியாத வகையில் செய்யப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்கள். இந்த இரண்டு பிரபலமான செயல்களுக்கும் ஒரு நாடு தடை விதிப்பது இதுவே முதல்முறை அல்ல.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி பற்றி டிக் டாக் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தானும் இந்த இரண்டு செயலிகளுக்கும் தடை விதித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தலிபான்கள் மக்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Malaimalar News