தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் - சுனாமி வருவதற்கும் எச்சரிக்கை!

தற்போது தைவானில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி வருவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-09-20 02:03 GMT
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் -  சுனாமி வருவதற்கும் எச்சரிக்கை!

தென் கிழக்கு தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மிகப் பெரும் சேதத்தை அந்நாடு சந்தித்து இருக்கிறது. நிலநடுக்கத்தின் சீற்றம் காரணமாக கட்டிடம் பாலம் இடிந்து விழுந்து பல்வேறு செய்தங்களும் அந்நாட்டிற்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் சுனாமி வருவதற்கான எச்சரிக்கையும் மக்களுக்கு விடுக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். நகரில் இருந்து 30 மீட்டர் தொலைவில் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரெக்டார் அளவுகோலில் 6 புள்ளியாக பதிவாகியுள்ளது.


இதனால் கட்டிடங்கள் குலுங்கி இடிந்ததில் அங்குள்ள மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார்கள். சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாகவும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையமும், ஜப்பான் வானிலை ஆய்வு மையமும் தற்போது எச்சரித்து உள்ளது. இந்நிலையில் மக்கள் அச்சத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கிறார்கள். ஹூவாலியன் பகுதி மூன்று மானிட கட்டிடம் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டவர்களின் மீட்பதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


நிலநடுக்கத்தின் காரணமாக ஆங்காங்கே பல்வேறு பாலங்கள் கட்டிடங்கள் இடிந்ததில் மக்கள் பலரும் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரயில் நிலைய அருகில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ரயில் அதிர்வு வீடியோவாக எடுக்கப்பட்ட சமூக வலைத்தளங்களில் வெளியானது. பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்த காட்சிகள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News