உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்தியாவில் கல்வி தொடர முடியுமா?
உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் கல்வி தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியது.
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் கல்வி தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து பலர் உக்ரைனில் மருத்துவ படிப்பு கல்லூரி பயின்று வந்தனர். ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்ததால், அங்கிருந்து மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பினர். உக்ரைனில் இன்னும் அமைதி திரும்பப்பெற நிலையில் இந்தியாவில் தங்களது மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்குமாறு அந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இதில் தொடர்பாக பஞ்சாப்பை சேர்ந்த அக்ஷிதா உள்ளிட்ட ஏழு மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கில் தாக்கல் செய்தார்கள்.
இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு கடந்த ஐந்தாம் தேதி பிறப்பித்தது. அப்பொழுது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சோலிஸ்ட்டர் ஜெனரல் மேத்தா அவர்கள் கூறுகையில், "உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவ கல்வியை இந்தியாவில் நிறைவு செய்வது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம், சாதகமான முடிவு எடுத்து உள்ளதாக தோன்றுகிறது என தெரிவித்தார். இதனையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, உக்கரை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவ கல்வியை இந்தியாவில் உள்ள பல்கலைக்கழங்குகளில் தொடர இந்திய மருத்துவ கவுன்சில் தேசிய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் இடம் இல்லை.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்தான் உக்ரைன்யில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள். நாட்டில் உள்ள முழுமையான மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேர அனுமதித்தால் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்ய வாய்ப்புகள் ஏற்படும். எனவே இதன் காரணமாக நாட்டின் மருத்துவ கல்வி முறையின் தரமும் குறையும். அதிகப்படியான கட்டணங்களை அவர்களால் செலுத்தவும் முடியாது. எனவே இந்த பதிவில் மத்திய அரசு தனது முடிவை சுப்ரீம் கோர்ட்டுக்கு தாக்கல் செய்தது இது தொடர்பாக மேலும் விசாரிக்க இன்று விசாரணை குழு தயாராக உள்ளது.
Input & Image courtesy: Economic News