மத்திய அரசு சிறப்பு ஏற்பாட்டில் மஸ்கட்டுக்கு ஏற்றுமதியாகும் மதுரை மல்லி

மத்திய அரசி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் நடவடிக்கை காரணமாக மஸ்கட்டுக்கு ஏற்றுமதி ஆகும் மதுரை மல்லி.

Update: 2022-09-22 02:29 GMT

மதுரையில் மல்லிகைப்பூ என்று ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்யும். அதாவது இந்த மல்லிகை பூவானது மற்றும் மல்லிகை பூவுகளை கூட அதிக வாசனை கொண்டது. எனவே இந்த மதுரை மல்லிகைக்கு மயங்காத பெண்களே என்று கூட சொல்லலாம். சிறப்புமிக்க மதுரை மல்லிகை பூவிற்கு நாம் ஏற்கனவே புவிசார் குறியீடு கொண்ட இந்நிலையில் இந்த மதுரை மல்லிகைப்பூ கடல் கடந்து வாசம் வீசும் வகையில் நேற்று மஸ்கட் நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டின்படி, புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லிகைப்பூ மஸ்கட் நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.


மத்திய அரசின் சிறப்பு முயற்சியின் காரணமாக மதுரை மல்லி, நிலக்கோட்டை, திண்டுக்கல் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய மலர்களான முல்லை, பிச்சி, பட்டன் ரோசாப்பூ, சாமந்தி, மரிக்கொழுந்து, துளசி, தாமரை, பன்னீர் ரோஜா, அள்ளி ஆகியவை நேற்று மஸ்கட் நகரத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டன. மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையும் காணொளி காட்சியின் கொடி அசைத்து அனுப்பி வைக்கும் விழாவுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதர் மற்றும் துணை தூதர் பிரவீன் குமார், தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறையின் இயக்குனர் பிருந்தா தேவி ஆகியோர் இக்காணொளி வாயிலாக கலந்து கொண்டார்கள்.


மிகப்பெரிய இறக்குமதி நாடு ஓமன் நகருக்கு வேளாண் மற்றும் இதர பொருட்களை ஏற்றுமதி செய்யும் திறனை இந்தியா கொண்டிருக்கிறது. அதே சமயம் ஏற்றுமதி செய்யும் நாடு தேவைப்படும் தரத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் இருந்து புவிசார் குறியீடு பெற்ற சுமார் 500 கிலோ மல்லிகை பூ மற்றும் பாரம்பரிய மலர்கள் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News