தமிழரின் பெருமைக்கு மேலும் ஒரு அடையாளம்- பிரிட்டனில் எம்.பி ஆன தமிழ் பெண்!
தமிழருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பிரிட்டனில் தமிழ் பெண் ஒருவர் பார்லிமென்ட்க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழர்கள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சென்று தங்கள் திறமைகளை நிரூபிப்பதும் ஆட்சி செய்வதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது. அது தமிழ் இனத்திற்கு பெருமையான விஷயமாக கருதப்படுகிறது. 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்ற நாமக்கல் கவிஞரின் பாடல் வரிகளை நிரூபிக்கும் வகையில் ஒரு தமிழ்ப் பெண் சாதனை புரிந்துள்ளார். கமலா ஹாரிஸ் வரிசையில் மீண்டும் ஒரு தமிழ்ப் பெண் அதை நிரூபித்துள்ளார். உமா குமரன் அவர்கள் பிரிட்டனில் ஸ்டான்போர்ட் அண்ட் பவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார்.
பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட உமா குமரன் என்ற தமிழ்ப்பெண் வெற்றி பெற்று எம்.பி., ஆகியுள்ளார். இவர், அந்நாட்டின் ஸ்டான்போர்ட் அண்ட் பவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு, 19,145 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரிட்டன் பார்லிமென்டிற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் பெண் என்ற பெருமையை உமா குமரன் பெற்றுள்ளார். அவருக்கு லண்டன் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இலங்கையில் வசித்த இவரது பெற்றோர், போரின் போது லண்டனுக்கு இடம்பெயர்ந்தனர். லண்டனில் பிறந்த உமா குமரன், அரசியல் இளநிலை பட்டம் பெற்றார். 2020 ல் கெய்ர் ஸ்டார்மரின் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான துணை இயக்குநராக பணியாற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ ஹட்சன் 7,511 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.
SOURCE :News