சீன கடன் செயலிகள் மோசடி விவகாரம் - பே.டி.எம் உட்பட கணக்குகள் முடக்கம்!

சீன கடன் செயலிகள் மோசடி விவகாரம் பேடிஎம் உள்ளிட்ட கணக்குகளில் சுமார் 46,000 கோடி முடக்கம்.

Update: 2022-09-18 03:30 GMT

சீனாவில் சேர்ந்த கடன் ஆப்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாகலாந்து மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏனெனில் சீனாவில் உருவாக்கப்பட்ட பல்வேறு ஆப்கள் மூலமாக பொதுமக்களுக்கு ஈஸியான முறையில் கடன்கள் தருவதாக கூறி, சிறிய அளவில் முதல் பெரிய அளவிலான பணத்தை அவர்களுக்கு கொடுத்து பின்னர் அதிக வட்டி அவர்களிடம் இருந்து வசூல் செய்து வந்தார்கள்.


அதன் அடிப்படையில் அந்த செயல்களுக்கு எதிராக சட்டவிரதம் பண பரிமாற்ற தடை வழக்கு அமலாக்க துறை பதிவு செய்தது. இதன் கீழ் டெல்லி, மும்பை, காசியபாத், லக்னோ, கயா உள்ளிட்ட நகரங்களில் கடந்த 14ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதில் முக்கிய ஆவணங்கள் தற்போது கைப்பற்றப்பட்டன. மேலும் பல்வேறு கணக்குகளின் மூலமாக ஒரு குறிப்பிட்ட செயலிகளின் மட்டும் தான் பணம் செலுத்தப்பட்டு மாற்றப்பட்டு வருகிறது.


சம்பந்தப்பட்ட சீன கடன் ஆப்களில் பணம் செலுத்துவதற்கான ஆன்லைன் தளங்களாக விளங்கும் paytm உள்ளிட்ட ஆன்லைன் கணக்குகள் மூலமாக கோடிக்கணக்கான பணம் போட்டு வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி வைத்திருந்த 46 கோடியே 67 லட்சம் பணத்தை அமலாக துறை முடக்கியது. ஈஸ்பஸ் என்ற தளத்தில் மட்டும் சுமார் 33 கோடியை 36 லட்சம் போடப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Input & Image courtesy: Livemint News

Tags:    

Similar News