பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தி.மு.க உடன்பிறப்பு - 'போக்சோ' சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்த காவல்துறை!

Update: 2021-04-17 05:15 GMT

செங்கல்பட்டு பகுதியில் 16 வயது மாணவியை 'பல்சர்' பைக்'கில் தூக்கி சென்று பலாத்காரம் செய்த தி.மு.க பிரமுகரை காவல்துறை அப்படியே அலேக்காக தூக்கி சென்று சிறையில் அடைத்தது.

செங்கல்பட்டு அடுத்த, திருமணி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முனி யாண்டி மகன் ராபின் தி.மு.க பிரமுகர். இவர், செங்கல்பட்டைச் சேர்ந்த, பிளஸ் 2 படிக்கும், 16 வயது சிறுமியை, நேற்று முன்தினம், 'பல்சர்' இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றார்.

படாளம் அடுத்த, சின்னகொளப் பாக்கம் பகுதியில், தனியார் பொறியியல் கல்லுாரி அருகில், ஒரு கடையின் அறையில், பள்ளி மாணவியை வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் புகாரின்படி, செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, ராபினை கைது செய்தனர்; இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். நேற்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் அவரை, மாவட்ட சிறையில் அடைத்தனர்.

மக்கள் மத்தியில் ஏதேனும் தவறு நடந்தால் உடனே ஊரை கூட்டி போராட்டம் செய்து, சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி புரட்சி செய்யும் தி.மு.க தற்பொழுது தன் கட்சி காரர் செய்யும் பாலியல் குற்றத்தை கண்டும் காணததுபோல் அமைதியாக இருந்து ஆதரிக்கிறது. இங்கே தன் கட்சியினரால் குற்றங்கள் நடக்கும் வேளையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்.

Similar News