மீம் போட்டதெல்லாம் உண்மைன்னு நினைக்கும் அப்பாவித்தனமான தி.மு.க ஐ.டி விங்! புதையலை காக்கும் பூதமான உ.பிக்கள்!

Update: 2021-04-18 01:45 GMT

EVM வைத்திருக்கும் மையத்தில் மடிக்கணினியுடன் சிலர் சென்றதாக ஒரு மூத்த திமுக பிரமுகர் கேள்வி எழுப்புகிறார். கல்லூரியில் மடிக்கணினியோடு செல்லாமல், மண்வெட்டியோடா செல்வார்கள்?

திமுகவினர் இப்படி நினைக்க காரணம் மடிக்கணினியுடன் சென்றவர்கள் EVMமெசினை ஹேக் செய்வார்கள் என்ற பயம். ஆனால் தேர்தல் கமிஷன் EVM ஹேக் செய்ய முடியும் என்றால் வந்து ஹேக் செய்து நிரூபியுங்கள் என்று எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து கிட்டத்தட்ட ஒரு வாரம் காத்திருந்தது.


அப்போதெல்லாம் இந்த வாய்ச்சவடால்கள் தேர்தல் கமிஷின் பக்கம் எட்டிக்கூட பாக்கதது தான் நகைமுரண். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், IT யில் வேலை பார்ப்பவர்கள் சிலரே EVM ஒரு network device என்று நினைப்பது தான்.




 


வாட்ஸ்அப் மீம்ஸ் எல்லாம் உண்மை என்று நம்புவது தான் இவங்க பகுத்தறிவா? EVMமெசினில் குளறுபடி என்றால், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 39திமுக எம்.பிகள் வெற்றி பெற்றது எப்படி? இந்த லாஜிக்கூட தெரியாமல் தேர்தல் ஆணையத்தை குறை கூறுவது நகைப்பை ஏற்ப்படுத்துகிறது. 

Similar News