உடன்பிறப்புகளோ வேகாத வெயிலில் கண்டெய்னனரை துரத்துகின்றனர், தி.மு.க தலைவரோ குளுகுளு கொடைக்கானலில் - சமூகநீதியை குந்தகைக்கு எடுத்த இயக்கம் தி.மு.க!

Update: 2021-04-21 10:15 GMT

கட்சியின் தலைவர் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழி என ஒரு சொலவடை உண்டு. ஆனால் தி.மு.க'வில் மட்டும் கட்சி தலைவர் ஸ்டாலின குளுளு பிரதேசமான கொடைக்கானலில் ஸ்டைலாகவும், தன் குடும்பத்தார் சகிதமாகவும் தன் பொழுதை கழிக்கையில் மாநிலத்தின் பிற பகுதிகளிலோ தி.மு.க'வின் உடன்பிறப்புகள் கோடை வெயிலில் கிடைக்கும் இடங்களில் தூங்கிக்கொண்டு, கிடைக்கும் சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிட்டுக்கொண்டு ஸ்டாலின் முதல்வராக இன்னும் அவர் குடும்பம் செல்வ செழிப்புடன் காவல் காத்து வருகின்றனர்.

போதாக்குறைக்கு பித்து பிடித்தார்போல் போகிற, வருகிற கண்டெய்னர் லாரி எல்லாவற்றையும் "ஏய் எங்கள ஏமாத்த பாக்குறாங்க" என விடாமல் துரத்தி வருகின்றனர். ஆரம்ப காலத்தில் போலீசரும் பொது மக்களும் இதனை சீரியசாக எடுததுக்கொண்டு உதவி புரிந்தனர் ஆனால் தற்பொழுதோ உடன்பிறப்புகளின் இந்த செயலை "தெருகூத்தாடி" கூத்து நடத்துவது போல் போல் பார்த்து சிரித்து வருகின்றனர்.

உடன்பிறப்புகள் கண்டெய்னர் லாரி துரத்திய சம்பவம் மற்றும் இதர காமெடி செயல்களை சில சம்பவங்களாக பார்ப்போம்!

நேற்று விருத்தாச்சலத்தில் தேங்காய் நார் ஏற்றி வந்ந கண்டெய்னரை சுற்றி வளைத்து சீரியசாகவே காமெடி செய்தனர் உபி'க்கள்.

கடலூரில் ரோட்டு ஓரமாக ஓட்டுனர் ஒதுங்குவதற்காக நிறுத்தி வைத்திருந்த கண்டெய்னரை திறந்து காண்பித்தால்'தாம் போவோம் என அடம் பிடித்தனர் தளபதியாரின் இயக்கம் கண்டெடுத்த தொண்டர்கள்.

போதாக்குறைகக்கு தஞ்சையில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அருகே வீடுகளில் வைக்கப்பட்டிருந்த டிடிஎச் ஆண்டனா'வை கழட்டியே தீர வேண்டும் என கருப்பு, சிவப்பு பார்டர் அணிந்த துண்டை தலையில் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் இவர்களை விரட்டினால் பாவம் நமக்குதான் வந்துசேரும் பாவம் மனநலம் குறைந்தவர்கள் என போலீசாரே டிடிஎச் ஆண்டனா'வை அகற்றினர்.

இப்படி பிதற்றலில் உடன்பிறப்புகளை சுற்ற விட்டு தலைவர் ஸ்டாலின் இன்ப சுற்றுலா சென்றுள்ளார், அவரது மகன் உதயநிதியோ அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் படம் நடிக்க சென்றுள்ளார்.

Similar News