"இராமாயணம், மகாபாரதத்தை ஏன் பாடமாக வைத்தீர்கள், மொகாலயர்களின் படையெடுப்பை பாடமாக வையுங்கள்" - ஆவேசப்படும் வைகோ!

Update: 2021-04-22 07:45 GMT

"புதிய பாடத்திட்டத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம்" போன்றவை தனித் தனி தலைப்புகளின் கீழ் சேர்க்கப்பட்டு முஸ்லிம்கள் கால ஆட்சியின் முக்கியத்துவத்தைக் குறைத்து ஒரே ஒரு தாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது" குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்றவற்றைச் சேர்த்து இருக்கின்றனர்.டெல்லி பல்கலைக் கழகத்தின் இளங்கலை வரலாற்றின் பழைய பாடத்திட்டத்தின் முதல் பாகம், இந்தியாவின் தொடக்க கால வரலாற்றைப் பேசுகிறது. ஆனால் தற்போது புதிய பாடத்திட்டத்தின் முதல் பாகம், "பாரத்வர்ஷாவின் கருத்துருவாக்கம் (Concept of Bharatvarsha)" என்ற பாடம் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. "பாரதத்தின் நித்தியம்" எனும் தலைப்பில் வேதங்கள், வேதாந்தங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்ற வைதீக பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப காலத்திலிருந்து கி.மு. 550 வரை என்ற மூன்றாவது தாளில், " சிந்து - சரஸ்வதி நாகரிகம் மற்றும் அதன் தொடர்ச்சி, எழுச்சி மற்றும் வீழ்ச்சி" பாடமாக இடம்பெற்று இருக்கின்றது.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம்' என்ற 12 ஆவது தாளில், "இராமாயணம் மற்றும் மகாபாரதம்" போன்றவை தனித் தனி தலைப்புகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.'இடைக்கால இந்தியா' பற்றி தற்போதுள்ள பாடத்திட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாறு குறித்து மூன்று தாள்கள் உள்ளன. அந்தக் காலகட்டம் குறித்து மூன்று பருவங்களுக்கு மேல் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் புதிய பாடத்திட்டத்தில் முஸ்லிம்கள் கால ஆட்சியின் முக்கியத்துவத்தைக் குறைத்து ஒரே ஒரு தாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது" என குற்றம் சாட்டியுள்ளார்.

இதுவர மொகாலயர்களின் படையெடுப்பை பாடமாக படித்து வந்த மாணவர்களுக்கு நம் கலாச்சாரத்தை, கண்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பாடதிட்டத்தை மாற்றியிருப்பது வைகோ'விற்கு ஏன் பிடிக்ப வில்லை என தெரியவில்லை? ஒருவேளை அவர் நம் மாணவர்கள் நம் பண்பாட்டை கற்பது எங்கே தனனை போன்ற வந்தேறி அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்தாக முடியுமோ என கருதுகிறாரோ என்னவோ?

Similar News