சனாதன தர்மத்தை அழிப்பேன் என சபதமெடுத்த திருமாவளவன் இன்று ரமலான் நோன்பு துவக்கினார்!

Update: 2021-04-27 01:15 GMT

இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் நடப்பதால் நோன்பிருந்து வருகின்றனர். இஸ்லாமிய முறைப்படி வருடம் ஒருமுறை 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை ரமலான் நோன்பு காலமாகும். இந்த காலத்தில் அதிகாலை 3:45 மணிக்கு நோன்பை துவங்கி அன்று மாலை சூரியன் மறையும் வேளையில் 6:30 மணியளவில் அன்றைய தின நோன்பை முடித்துகொள்வர் இதனைதொடர்ந்து பிறை கணக்கை வைத்து ரம்ஜான் பண்டிகையை கணக்கிட்டு நோன்பை முடித்துக்கொள்வர். இது இஸ்லாமிய மரபு.

இந்த இஸ்லாமிய முறைப்படி நோன்பு இருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வருடம் தவறாமல் கடைபிடித்து வருகிறார்.

இதனை இன்று தனது ட்விட்டர் பதிவில் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தினார். இன்று காலை 5:29 மணிக்கு தனது ட்விட்டர் பதிவில் ரமலான் நோன்பு துவங்கியதை குறிப்பிட்டு அதன் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்

அதில், "இன்று அதிகாலை 3.45 மணியளவில் வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் இஸ்லாமியத் தோழர்கள் மற்றும் இயக்க நிர்வாகிகளுடன் #சஹர் உணவேற்று #நோன்பைத் தொடங்கினேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்துமதம் என்றாலே வெறுப்பு, வார்த்தைக்கு வார்த்தை சனாதனத்தை ஒழிக்கிறேன் என அறைகூவல் விடுப்பது, அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோவில்கள் என இந்துமத கோவில்களை இழிவாக பேசுவது என இந்துமத எதிர்ப்பை முழு மூச்சாக செய்துவரும் திருமாவளவன் இஸ்லாமிய மதம் என்றவுடன் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவதன் மர்மம் என்னவோ?

Similar News