வி.சி.க, ம.தி.மு.கவை அழைக்காமல் திட்டமிட்டு தி.மு.கவை மட்டும் அழைத்து உடன்பட வைத்துவிட்டார்கள் - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கதறும் திருமாவளவன்!

Update: 2021-04-28 07:30 GMT

"வி.சி.க, ம.தி.மு.க'வை அழைக்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி எனக்கூறி தி.மு.க'வை மட்டும் அழைத்து நம்பவைத்து, சம்மதம் வாங்கி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து விட்டனர்" என ஆதங்கம் பொங்க பேசியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் திருமாவளவன் அப்போது ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படவுள்ள அறிவிப்பை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, "அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, வி.சி.க, ம.தி.மு.க போன்ற கட்சிகளை தமிழக அரசு திட்டமிட்டுத் தவிர்த்துவிட்டது. மத்திய அரசின் முடிவுக்குத் தி.மு.க'வை சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்" என குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது, "இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் வேதாந்தா குழுமம் உள்ளது. அங்கெல்லாம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முனைப்பு காட்டவில்லை. தமிழகத்தில் மூடப்பட்டுள்ள நிறுவனத்தில் உற்பத்தி செய்ய எடுக்கப்பட்ட முடிவு என்பது முரண்பட்டது. இருந்தாலும், கொரோனா அலை தாக்கத்தால் மக்களுக்காக வி.சி.க இதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதைவிட மற்ற இடங்களுக்கு அதைக் கொண்டு செல்வது பெரிய இடர்ப்பாடாக இருக்கும் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். அந்தந்த மாநிலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவே முயற்சி எடுக்க வேண்டும்" என்றார்.

மேலும், "தற்பொழுது தற்போது தமிழகத்துக்கு தேவைப்படும் 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கேரளாவில் இருந்து கொண்டுவரப்படுகிறது. ஒரு வேளை கேரளாவுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால் தமிழகத்தின் தேவை எப்படிப் பூர்த்தி ஆகும்? எனவே தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜனை மாநில அரசு உற்பத்தி செய்ய முயற்சி செய்ய வேண்டும். தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனைத் தமிழகத்துக்கே வழங்க வேண்டும். எனவே தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.

Similar News