ஸ்டாலின் என்ற பிம்பத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டமைக்க முயன்றது தோல்வியா? முன்னிலை நிலவரம் கூறுவதென்ன?

Update: 2021-05-02 05:15 GMT

இன்றைய தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் நமக்கு கிடைத்துகொண்டிருக்கும் செய்திகளை வைத்து ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. அது கண்டிப்பாக தி.மு.க ஆரதவு அலை இல்லை என்றே தெரிகிறது.

இன்றைய 10:30 மணி வரையிலான தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முன்னிலை நிலவரங்களை பார்க்கும் போது அ.தி.மு.க 75 இடங்களில், தி.மு.க 86 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக முடிவுகள் வருகின்றன.

இதனை பார்க்கும் போது ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது, அது ஆட்சி மாற வேண்டும் என மக்கள் நினைக்கவில்லை என்றும், ஸ்டாலின் என்ற பிம்பத்தை நூற்றுக்கணக்கான கோடிகள் செலவழித்து கட்டமைக்க முயன்றது தோல்வியடைந்தது எனவும், தி.மு.க'தான் மாற்றம் என மக்கள் உணரவில்லை எனவும் தெரிகிறது.

இன்று மாலைக்குள் முடிவுகள் முழுவதும் தெரிந்துவிடும்.

Similar News