தி.மு.க மூத்த தலைவரே தனது தொகுதியில் பின்னடைவு! மக்கள் தீர்ப்பு சொல்ல வருவதென்னா? அதிர்ச்சியில் தி.மு.கவினர்!

Update: 2021-05-02 05:57 GMT

காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில் காட்பாடி தொகுதியில் முதல் சுற்று நிலவரப்படி அதிமுக வேட்பாளர் வி.ராமு 6,918வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் துரைமுருகன் 5,609 வாக்குகள் பெற்று பின் தங்கி உள்ளார். இருவருக்கும் இடையே 1,309வாக்குகள் வித்தியாசம் உள்ளது.

அதிகப்படியான வாக்குகள் பெற்று துரைமுருகன் வெற்றி பெறுவார் என திமுக எதிர்பார்த்த நிலையில் முதல் சுற்றிலேயே பின்தங்கி இருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

துரைமுருகன் பின்னடைவு:

திமுக வேட்பாளர் துரைமுருகன்: 5,609

அதிமுக வேட்பாளர் வி.ராமு: 6,918

வித்தியாசம்: 1,309

மூன்றாவது சுற்று நிலவரம் வெளியானதாக கூறப்படும் நிலையில், அதிலும் துரைமுருகன் பின்னடவை சந்தித்துள்ளார். மூன்றாவது சுற்று நிலவரப்படி 2,722 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. 

Similar News