வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் மலர போகும் தாமரை - பா.ஜ.கவின் தடம் தமிழகத்தில் ஆரம்பம்!
தற்பொழுது நட்பெற்று முடித்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க'விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் 5 தொகுதிகள் தற்பொழுது முன்னிலை வகிக்கிறது பா.ஜ.க.
தாராபுரம், ஊட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், மொடக்குறிச்சி என தமிழகத்தின் 5 முக்கிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது பா.ஜ.க.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று எம்.எல்.ஏ'க்களை பெற இருப்பது தமிழக பா.ஜ.க'விற்கு வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இதனைதொடர்ந்து பா.ஜ.க தொண்டர்கள் இந்த முன்னணி அறிவிப்பு வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.