"நீங்க ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது தன்னம்பிக்கை அளிக்கிறது" என ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய நடிகர் சூர்யா!

Update: 2021-05-07 05:15 GMT

"நீங்க ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது தன்னம்பிக்கையை அளிக்கிறது" என நடிகர் சூர்யா ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுளள வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் முதல்வராக' பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

சுவாசிப்பதற்கு உயிர் காற்று'கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்." என குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News