தமிழகத்தில் முழு ஊரடங்கு பற்றி இன்று மாலை அறிவிப்பா?

Update: 2021-05-07 11:00 GMT

தமிழகத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமலாகுமா?

இன்று காலை 9 மணியளவில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் அடுத்தடுத்து 5 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதே சமயத்தில் கொரோனோ இரண்டாம் அலை வீரியமாக தமிழகத்தை தாக்கி வருவதை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் முழு ஊரடங்கு வேண்டும் என கோரியிருந்தனர். ஆனால் தற்பொழுது கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மட்டுமே அமலில் உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டத்தில், "தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்" என்று மருத்துவ நிபுணர்கள் விடுத்த கோரிக்கை குறித்து ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார்.

அமைச்சரவை ஒப்புதல் தரும் பட்சத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News