சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலனஸ்கள் - விழி பிதுங்கி நிற்கும் சுகாதாராத்துறை!

Update: 2021-05-12 04:00 GMT

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனோ இரண்டாம் அலை கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அறிக்கையின்படி நேற்று முன்தினம் மட்டும் தமிழகத்தில் புதிதாக 28,978 பேர் பாதிக்கப்பட்டனர். 20,904 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 232 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதி தேவை என்பதாலும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் மட்டும் 7,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 35,153 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு அதிகபட்சம் பத்தாயிரம் படுக்கை வசதிகள் தேவைப்படுவதால் சென்னையில் உள்ள மருத்துவமனைகளான ராஜிவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை தயார் செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன.

புதிதாக அமைந்துள்ள தி.மு.க அரசின் சுகாதாரத்துறை இதனை சமாளிக்க திணறி வருகிறது. தற்பொழுது ஊரடங்களை தமிழக அரசு அறிவித்துள்ற நிலையில் பாதிப்பு எண்ணிக்கை குறையும் பட்சத்தில் இதற்கான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article source - Malai Malar,

Image souce - Dinamalar.

Similar News