இனி நாங்க தான் எல்லாமே! அரசு அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க எம்எல்ஏ!

Update: 2021-05-17 01:15 GMT

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள நியாய விலைக்கடையில் கரோனா நிவாரண நிதியை வழங்க சென்ற அதிமுக எம்எல்ஏவை திமுகவினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா நிவாரண நிதியுதவியான 2,000 ரூபாயை வழங்குவதற்காக, வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்றுள்ளார்.

அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார், கரோனா நிவாரண நிதி வழங்கிவிட்டு சென்ற பிறகு அங்கு சென்ற ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ், "நாங்கள் வருவதற்குள் அதிமுக எம்எல்ஏவை வைத்து எப்படி நிவாரணத்தொகை வழங்கலாம்?

நான் ஜோலார்பேட்டை தொகுதிக்கு மட்டும் அல்ல, 4 தொகுதிகளுக்கும் நான் தான் மாவட்டச்செயலாளர். எனவே, என் தலைமையில் தான் இனி நிவாரணத் தொகை வழங்க வேண்டும்" என, அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி இன்று வைரல் ஆனது.

இது குறித்து பேசிய பேசிய அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதி என்பதால், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதி உதவி வழங்க வந்துள்ளேன் எனக்கூறினார்.

திமுகவினர் "உங்கள் ஆட்சியில் நீங்கள் வழங்கினீர்கள், இது எங்கள் ஆட்சி, நாங்கள் தான் வழங்குவோம்" என, கூறியதால் தொடர்ந்து இரு கட்சியினரிடையே பதற்றம் நீடித்து வருகிறது. 


Similar News