"ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை அதிகப்படுத்திய மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி" என ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்!
ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை அதிகரித்து அறிவிப்பு செய்த மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் அதிக பாதிப்பை கொரோனோ இரண்டாம் அலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் போதுமான கையிருப்பு இல்லாத காரணத்தினால் மாநில முழுவதும் அரசு மருத்துவமனையில் முன்பு ஆயிரக்கணக்கானோர் இந்த மருந்தை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அதிரடியாக தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் அளவை அதிகரிக்கக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு நாளொன்றிற்கு 20 ஆயிரம் மருந்துகள் கூடுதலாக கிடைக்கும்.
இதனைதொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை அதிகரித்ததற்கு நன்றி தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.