"கண்டா வரச்சொல்லுங்க! விஜயபாஸ்கர கையோடு கூட்டி வாருங்க!" - நிலைமை கைமீறி சென்றதால் விஜயபாஸ்கரை அழைத்த தி.மு.க!
கொரோனோ இரண்டாம் அலை நாடு முழுவதும் கொடிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இரண்டாம் அலை பல மரணங்களை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் வரிசையில் மக்கள் நிற்கின்றனர், தடுப்பூசி வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர், சுடுகாட்டில் தகனம் செய்வதற்கு வரிசையில் நிற்கின்றனர். இப்படி தமிழகம் இதுவரை இல்லாத அளவிற்கு கொடிய பாதிப்பை இந்த காலத்தில் கொரோனோ இரண்டாம் அலையால் சந்தித்து வருகிறது.
முதல் அலையில் இருந்து குறைந்த பாதிப்பில் தப்பித்த தமிழகம் இரண்டாம் வேற்றுமை அலையில் நிறைய மரணங்களையும், போதிய அளவு மருந்து இல்லை என்ற அவல நிலையையும், படுக்கை வசதிகள் கூட இல்லை என்ற கொடூர நிலையையும் எதிர்கொண்டு வருவதை நம் கண்கூடாக பார்க்க முடிகிறது.
இந்த இரண்டு கொரோனோ அலை காலகட்டத்திற்கும் தமிழகத்தில் ஓர் வித்தியாசம் உண்டு. அது ஆட்சி மாற்றம் கடந்த முதல் கொரோனோ காலகட்டத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி பீடத்தில் இருந்தது. முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் ஆகியோர் பதவியில் இருந்து சிறப்பாக கொரோனோ
பேரிடர் நிலையை கையாண்டனர். அதிலும் விஜயபாஸ்கர் ஓர் மருத்துவர் என்பது கடந்த அ.தி.மு.க அரசிற்கு கூடுதல் பலம். மருத்துவமனை வசதி குறித்து திட்டமிடல், மாவட்ட வாரியாக ஆய்வு, படுக்கை வசதிகளை சிறப்பாக திட்டமிட்டு நோயாளிகள் கூட்டமாக வரும் சமயத்தில் சிறப்பாக கையாண்ட விதம், நோயாளிகளுக்கு சத்தான சாப்பாடு மற்றும் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு மருத்துவராக இருந்த காரணத்தினால் சுலபமாக புரிந்துகொண்டு இக்கட்டான சமயத்தில் சிறப்பாக கையாண்டார்.
தற்பொழுது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது. முதல்வராக ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் பொறுப்பேற்று உள்ளனர். தற்பொழுது கொரோனோ இரண்டாம் அலையால் மக்கள் செத்து மடியும் காலகட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு, படுக்கை வசதிகள் கையிருப்பு, மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற மனித வள வசதிகள் பற்றிய தகவல் ஆகியவற்றை நோய் தொற்றின் வீரியம் அறிந்து முன்கூட்டியை நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசு தவறிவிட்டது.