சமந்தா நடித்த தொடருக்கு தடை? பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக அமைச்சர் கடிதம்..!

Update: 2021-05-25 09:05 GMT

"தி பேமிலி மேன்-2" என்னும் இணைய தொடரின் டிரைலர் கடந்த வாரம் இணையதளத்தில் வெளியானது. இந்த  டிரைலரை பார்த்த பலர் இதில் ஈழ தமிழர்களை தவறுதலாக காட்ட படுவதாக கூறி பெரும் சர்ச்சை மற்றும் கண்டன குரல் எழுந்தது. அது மட்டுமின்றி இந்த இணைய தொடரையே தடை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் திரு.வைகோ ஆகியோர் தெரிவித்து இருந்தனர்.


இவ்வாறு கண்டன  குரல் எழுந்ததை அடுத்து தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு.மனோ தங்கராஜ் அவர்கள், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன்-2 ட்ரைலரில் ஈழ தமிழர்களை தவறாக காட்டிருப்பதாகவும் அதனால் தமிழர்களின் மனம் வேதனை அடைந்ததாகவும் பல கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆகையால் இந்த தொடரை தமிழகம் மட்டுமின்றி  இந்தியா முழுவதும் தடை  செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.


பல அரசியல் கட்சி தலைவர்கள் இந்த ட்ரைலரை பார்த்து தமிழர்களின் மனம் வேதனை அடைந்ததை தொடர்ந்து அமைச்சர் இதை தடை செய்ய கோரி கடிதம் எழுதினது பாராட்டத்தக்கது. ஆனால் பல தமிழ் படங்களில், ஹிந்து மத நம்பிக்கைகளை கேலி செய்யும் விதமாக காட்சி அமையும்போது அதை நீக்க கோரி விண்ணப்பித்தால் சில அரசியல் தலைவர்கள் அது கருத்து சுதந்திரம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது.

Tags:    

Similar News