பிரதமர் மோடியின் ஏழு ஆண்டு கால ஆட்சியை கொரோனா நிவாரண பொருட்களை கொடுத்து கொண்டாடிய பா.ஜ.க!

Update: 2021-05-31 10:06 GMT

கடந்த 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். மோடி பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறை வடைந்த நிலையில் பா.ஜ.க சார்பில் நேற்று '#7years of seva' என்ற ஹாஷ்டாகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக உள்ள நிலையில் பா.ஜ.க சார்பில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. 

இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்று 7 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதற்கு பிரதமர் மோடி மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்த நாளை சேவை தினமாக கொண்டாடுகிறோம். நாடு முழுவதும் ஒரு லட்சம் கிராமங்களில் கோடிக்கணக்கான பாஜக கட்சித் தொண்டர்கள் இன்று (நேற்று) சேவை செய்வார்கள்" என பதிவிட்டுள்ளார்.


மோடி அரசின் 7 ஆண்டு ஆட்சியை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், முகக்கவசங்கள், கிருமிநாசினி உள்ளிட்ட கொரோனா நிவாரண பொருட்களை பிற மாநிலங்களுக்கு கொடி அசைத்து அனுப்பிவைத்தார் ஜே.பி.நட்டா . மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் அமைச்சர்கள் தலா இரண்டு கிராமங்களுக்கு சென்று சேவை பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று கட்சித் தலைமை கேட்டுக் கொண்டது.


Tags:    

Similar News