"எவனுமே உத்தமன் கிடையாது" - யூ ட்யூப் மதனை உசுப்பேற்றிய மா.கா.பா.ஆனந்த் - விசாரணை வளையத்திற்குள் வருவாரா?
18 வயது நிரம்பியிராத குழந்தைகள் இணயத்தில் சுதந்திரமாக உலா வருவதனால் என்னவெல்லாம் ஆபத்து நிகழும், பிஞ்சு வளரும் உள்ளங்கள் என்ன எந்தளவிற்கு வக்கிரம் நிறைந்த வன்ம மனதாக மாறும் என்பதற்கு சரியான உதாரணமாக யூ ட்யூப் சேனல் மதன் விவகாரம் உருவெடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் விஜய் டி.வி தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த் யூ ட்யூப் மதனை பாராட்டி, புகழ்ந்து பேசி அவரை ஊக்குவிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
யூ ட்யூப் பதிவாளர் மதன் ஆன்லைன் விளையாட்டின் போது கெட்ட வார்த்தை பேசிய வீடியோக்கள், பெண்களை பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோக்கள், மற்ற பெண்களுடன் தனியாக ஆபாசமாக பேசிய வீடியோக்கள் என அனைத்தும் தற்பொழுது சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து யூ ட்யூப் பதிவாளர் மதன் மீது காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மதன் மாதிரி ஆள்களுக்கு மாகாபா மாதிரி ஆள்க குடுக்குற சர்டிபிகேட் பாருங்க
— Arulraj (@I__Arulraj) June 13, 2021
எப்டி இப்டி Abuser ஒருத்தனை Justify பண்றாங்கனன்னு பாருங்க pic.twitter.com/Hn3slM1tH9
இந்த நிலையில் விஜய் டி.வி தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த் யூ ட்யூப் மதனுடன் வீடியோ கால் பேசும் சமயத்தில், "நான் உங்களை பாத்துட்டு இருக்கேன். எவனுமே உத்தமன் கிடையாது, எல்லாருக்கும் கெட்ட வார்த்தை தெரியும், எல்லாருக்கும் கெட்ட பழக்கம் இருக்கு. ஆனா இதை எல்லாத்தையும் பொதுவாக சமூகவலைதளத்தில் நீங்கள் பேசுவது எனக்கு மகிழ்ச்சியே!" என யூ ட்யூப் மதனுடன் உரையாடும் வீடியோ வெளியாகியுள்ளது எனவே போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் மா.கா.பா.ஆனந்த் வருவாரா என பொருத்திருந்து பார்க்கலாம்.