"தி.மு.க-வை திராவிட முன்னேற்ற சூதாடும் இடம்" என அழைக்கலாமா?" - ராம ரவிக்குமார் காட்டம்!

Update: 2021-06-14 09:00 GMT

"தி.மு.க-வை திராவிட முன்னேற்ற கிளப் - சூதாடும் இடம் என அழைக்கலாமா?" என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கவறும், கழகமும், கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்' என்ற திருக்குறளுக்கு மு.வரதராசனார் எழுதிய உரையில் 'சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையையும் மதித்து கைவிடாதவர் எல்லாப் பொருள் உடையவராக இருந்தும் இல்லாதவர் ஆகிவிடுவார்' என குறிப்பிட்டுள்ளார். கருணாநிதி எழுதிய உரையில் 'சூதாடும் இடம் அதற்கான கருவி அதற்குரிய முயற்சி ஆகியவற்றை கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவர்' என குறிப்பிட்டுள்ளார்.

'பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் 'கழக'த்துக் காலை புகின்' என்ற குறளுக்கு கருணாநிதி எழுதிய உரையில் 'சூதாடும் இடத்திலேயே ஒருவர் தன் காலத்தை கழிப்பாரேயானால் அது அவருடைய மூதாதையர் தேடி வைத்த சொத்துகளையும், நற்பண்பையும் நாசமாக்கிவிடும்' என குறிப்பிட்டுள்ளார். சாலமன் பாப்பையா தன் உரையில் 'சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால் அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும் நல்ல குணங்களையும் கெடுக்கும்' என குறிப்பிட்டுள்ளார். எனவே இந்தியா 'ஒன்றியம்' என்றால் திராவிட முன்னேற்ற 'கழகம்' என்பதை திராவிட முன்னேற்ற 'கிளப்' சூதாடும் இடம் என்று அழைக்கலாமா?" என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News