"எங்க இஷ்டத்துக்கு படம் எடுப்போம்! கேட்க நீங்க யாரு?" திமிரும் நடிகர் சூர்யா!

Update: 2021-07-02 16:15 GMT

திரையுலகம் மற்றும் ஓ.டி.டி தளத்தின் படைப்புகளை திருத்த வழிவகை செய்யும் 'ஒளிப்பதிவு திருத்த வரைவு சட்டத்திற்கு' எதிராக நடிகர் சூர்யா இன்று குரல் குடுத்துள்ளார்.

இன்று அவரது ட்விட்டர் பதிவில் "சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல..." என 'ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு 2021'-க்கு எதிராக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்தின் மூலம் படைப்பாளிகள் படைக்கும் படைப்புகளினால் பார்க்கும் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காத அளவிற்கு ஒரு வரைமுறை ஏற்படுவதை நடிகர் சூர்யா விரும்பவில்லை என தெரிகிறது. நாங்கள் எடுப்பதுதான் சினிமா அதனை அனைவரும் பார்த்தே ஆக வேண்டுமே என்ற அகம்பாவும் கூட சேர்ந்தே தெரிகிறது.

இந்த சட்ட வரைவு மூலம் மத்திய அரசு படைப்பாளிகளிகளை ஒழிக்க நினைப்பதில்லை மாறாக படைப்பாளிகளின் படைப்புகளை அனைத்து மக்களும் சரிசமமாக கருத்து மோதல்கள் இன்றி, சமுதாய பேதமின்றி, குற்ற உணர்ச்சி இன்றி பார்க்கும் நிலை வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.

ஆனால் இதனை சூர்யா எதிர்க்கிறார். நீட் தேர்வு விவகாரத்தில் அய்யகோ மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என கூக்குரலிட்டவர் திரையுலகம் என வரும்போது பார்வையாளர்கள் எப்படி போனால் என படம் எடுக்கும் நாங்கள் எங்கள் விருப்பத்திற்கு படம் எடுக்க வேண்டும் என நினைப்பது முரணாக உள்ளது.

Similar News