"நாட்டுக்கு எது தேவையோ அதை கேளுங்கள்" - செய்தியாளர்களை வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜு!

Update: 2021-07-03 16:30 GMT

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலா பற்றிய கேள்வியால் செய்தியாளர் சந்திப்பில் டென்ஷன் ஆனார்.

சசிகலா சமீப காலமாக தொலைபேசி உரையாடல்கள், அ.தி.மு.க-வினருடன் அரசியல் சம்மந்தப்பட்ட ஆலோசனை, தனது ஆதரவாளர்கள் மூலமாக வாழ்த்தியும், அ.தி.மு.க கட்சியை கைப்பற்றும் ரீதியில் போஸ்டர்கள் என அ.தி.மு.க தலைவர்களை கலங்கடித்து வருகிறார். இந்த நிலையில், எதிர்கட்சி பொறுப்புகள் ஒருபுறம், சசிகலா தரப்பு இடையூறுகள் ஒருபுறம் என அ.தி.மு.க தலைகள் இடைஞ்சலை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த செல்லூர் ராஜூ, எம்.ஜி.ஆரு-க்கு கூட ஆலோசனை சொல்லியிருப்பதாக சசிகலா கூறியது பற்றி கேட்டபோது பொறுமை இழந்தார். சசிகலாவால் அ.தி.மு.க-வில் பிளவு ஏற்படுமா என செய்தியாளர் கேட்டபோது செல்லூரார் சற்று சூடாகப் பதில் கொடுத்தார்.

நாட்டுக்கு என்ன தேவையோ அதைப்பற்றிக் கேளுங்க சார்...என்று செல்லூர் ராஜூ பதிலளித்த போது சற்று டென்ஷன் ஆனார். மேலும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனக் கூறுவதற்குப் பதிலாக ஊடகங்களை மூன்றாவது தூண் என்று கூறி சில அறிவுரைகளையும் வழங்கினார்.

Similar News