"காவிரி ஆணைய ஒப்புதலின்றி மேகதாது அணைக்கு அனுமதி கிடையாது" - துரைமுருனிடம் உறுதியளித்த மத்தியஅமைச்சர்!

Update: 2021-07-16 15:45 GMT

"காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது" என தமிழக அமைச்சர் துரைமுருனிடம் தெரிவித்த மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்.

டெல்லியில் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் அவர்களை தமிழக அனைத்து கட்சிக்குழு சந்தித்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். மேலும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எந்த வகையிலும் மத்திய அரசு துணை போகக்கூடாது என்று வலியுறுத்தினோம்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்" எனவும் கூறினார்.

Similar News