பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயார்! தி.மு.க இதனை ஆதரிக்குமா? - அண்ணாமலை கேள்வி

Update: 2021-07-29 00:45 GMT

"பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது. இதையே தமிழக நிதியமைச்சர் சொல்வாரா?" என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாவது, "பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தபோது சொன்னதை தற்பொழுது சொல்லத் தயாரா. இதையே தற்போதைய தமிழக நிதியமைச்சர் சொல்வாரா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே அவர் பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்ற பொழுது, "குறித்து வைத்துக்கொள்ளுங்கள் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் இதே தி.மு.க எதிர்த்து நிற்கும்" என கூறியது குறிப்பிடதக்கது.

Similar News