தொடரும் மின்தடை - 'எவ்ளோ நாள்தான்யா பராமரிப்பு'ன்னு சொல்லுவீங்க?' என கொந்தளிக்கும் மக்கள்!

Update: 2021-07-29 02:15 GMT

தமிழகத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டு, "யோவ் எவ்ளோ நாள்தான் பராமரிப்பு'ன்னு சொல்லுவீங்க?" என கொந்தளிக்கின்றனர் தமிழக மக்கள்.

மின்வெட்டு இந்த வார்த்தையை கேட்டாலே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடனே தி.மு.க என்பர். அந்தளவிற்கு தி.மு.க ஆட்சியையும், மின்வெட்டையும் பிரிக்க முடியாது. கடந்த 2006-2011 ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது பாராட்டு விழாக்களில் மூழ்கி தமிழகத்தை இருளில் தவிக்க விட்டார் அப்போதைய முதல்வர் கருணாநிதி, அப்போதைய தொடர் 8 மணி நேர மின்வெட்டுகளால் தொழிலை மூடிவிட்டு கூலி வேலைக்கு சென்ற தொழில் முனைவர்கள் நிறைய. பல தொழில்கள் காணாமல் போகின, நிறைய வீடுகளில் 'இன்வெர்ட்டர்' எனப்படும் மின்தடையின் போது பயன்படும் பேட்டரி சாதனங்கள் முளைத்தன. இப்படி தமிழகத்தை இருண்ட மாநிலமாக தி.மு.க பத்து வருடங்கள் முன் வைத்திருந்தது.

அதன் பிறகு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு சரி செய்யப்பட்டு மின்தடை என்ற வார்த்தையே தமிழக மக்களுக்கு மறந்து போனது.

இந்நிலையில் மீண்டும் நிறைய பொய் வாக்குறுதிகள் அளித்து தி.மு.க ஆட்சியை பிடித்தது. தற்போது மீண்டும் மின்வெட்டினால் தமிழக மக்கள் அவதிப்படும் அபாய சூழல் உருவாகியுள்ளது. சில நாட்கள் முன்பு இந்த மின்தடைக்கு அணில்கள் தான் காரணம் என வாயில்லா ஜீவன்கள் மீது அபாண்டமாக பொய் கூறி சில நாட்கள் தி.மு.க அமைச்சரும் அவர்தம் கூட்டத்தாரும் தப்பித்தனர், பிறகு பராமரிப்பு என மற்றொரு சமாளிப்பை முன்வைத்தனர். ஆனால் இவை அனைத்தையும் கடந்து தற்பொழுது மின்வெட்டு அதிகமாகி மக்களை புழுங்கடித்து வருகிறது

"யோவ் எத்தனை நாள்தான்யா பராமரிப்பு பணி செய்வீங்க?" என தி.மு.க'விற்கு ஓட்டு போட்டவர்களே கதறும் அளவிற்கு மின்தடை அவஸ்த்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. தி.மு.க வழக்கம்போல் "எப்படி எங்க ஆட்சி?" என தங்கள் ஆதரவு மீடியாவை வைத்து விளம்பரம் செய்வதில் பரபரப்பாக உள்ளது.

Similar News