திருட்டு ரயில் ஏறி வந்த கருணாநிதி குடும்பத்திற்கு ஏதுய்யா இவ்வளவு பணம்? - சீமான் பாய்ச்சல்
"திருட்டுத்தனமாக டிரெயின் ஏறி வந்த கருணாநிதியின் குடும்பத்துக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது?" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மறைந்த கடல்தீபன் படத் திறப்பு விழாவில் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "உனக்கு என்ன வருமானம் வருகிறது எப்படி சாப்பிடுகிறாய் என? ஒவ்வொருவரிடம் பணம் பெற்றுக் கொண்டுதான் செலவு செய்கிறேன்.
ஆனால் வெலல்மண்டி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமியிடம் எப்படி இவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என கேட்டிருக்க வேண்டும். திருட்டுத்தனமாக டிரெயின் ஏறி வந்த கருணாநிதியின் குடும்பத்துக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது என கேட்டிருக்கனும்... நீ டிரெயினுக்கு காசு கூட இல்லாமல் வந்த உனக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? தம்பி உதயநிதி தொடர்ச்சியாக படம் எடுக்கிறார். ஒரு படமும் ஓடவில்லை, ஆனால் தொடர்ந்து உதயநிதி படம் எடுக்கிறாரே பணம் ஏது?
எனக்கு எங்கிருந்தோ எனக்கு பணம் வருகிறது என்கிறார்கள்.. எங்கிருந்தோ வருகிறது என்று தெரிகிறது அல்லவா.. அதை எங்கிருந்து வருகிறது என புலனாய்வு செய்யலாமே,
தமிழின ஓர்மையை திட்டமிட்டு சிதைக்கிற திராவிட கூட்டத்துக்கு தமிழ் பிள்ளைகள் அடிமையாகிவிடக் கூடாது. நான் 10 வயதில் இருந்து மேடையில் பேசுகிறவன், என்னிடம் வாயை கொடுக்கக் கூடாது. நாம் தமிழர் கட்சி கட்டப் போகும் நெய்தல் படையணியில் கடல் தீபன் பெயரில் சிறப்பு படையணி உருவாக்குவோம்" இவ்வாறு சீமான் பேசினார்.