பரபரப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த் - சசிகலா சந்திப்பு !

Update: 2021-12-08 00:45 GMT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று சசிகலா அவர்கள் சந்தித்த விவகாரம் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில் அரசியல் நிகழ்களில் சசிகலா அதிக ஆர்வம் காட்டி வருகிறார், அரசியல் பிரவேசம், அரசியல் கருத்துக்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனமெ செலுத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் இன்று போயஸ் கார்டன் ரஜினிகாந்த் அவர்களின் வீட்டுக்கு சென்று ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா அவர்களையும் பூங்கொத்து கொடுத்து சந்தித்துள்ளார் சசிகலா.




திடீரென நடைபெற்ற இந்த சந்திப்பு திரையிலகம் மற்றும் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திரைப்படத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சகேப் பால்கே விருதை ரஜினிகாந்த் பெற்றிருந்தார். அதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சசிகலா சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக சசிகலா தரப்பில் இருந்து செய்திகள் வெளியானது.

அவர்கள் மூவரும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News