தி.மு.க.வை விமர்சனம் செய்தால் கைது செய்வீர்களா: மாரிதாஸ் கைதுக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மதுரையில் மாரிதாஸ் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்!
திமுகவை விமர்சனம் செய்தததால் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரை புறநகர் பகுதியில் உள்ள மாரிதாஸ் வீட்டிற்கு சென்று கைது செய்துள்ளனர். இதற்கு பாஜகவினர் கண்டனங்களை எழுப்பியும், போலீசார் அராஜகம் மற்றும் திமுக அரக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் மாரிதாஸ் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்!
— K.Annamalai (@annamalai_k) December 9, 2021
ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
1/2
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மதுரையில் மாரிதாஸ் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்!
ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுகவை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை. ஒருபக்கம் சமூக வலைதளத்தில் தன்னுடைய ஏவல் படையை தயார் செய்தும், இன்னொரு பக்கம் தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது! இந்த கபட நாடகத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter