கோமாரி தடுப்பூசி வழங்கவில்லை என்று அமைச்சர் சொல்வது பொய்: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மத்திய அரசு அதிகமான கோமாரி தடுப்பூசியை வழங்கியிருப்பதாகவும், அமைச்சர் தேவையின்றி பொய் சொல்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மத்திய அரசு அதிகமான கோமாரி தடுப்பூசியை வழங்கியிருப்பதாகவும், அமைச்சர் தேவையின்றி பொய் சொல்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பொம்மைகுட்டை மேட்டில் பாஜக சார்பாக இயற்கை விவசாயம் பற்றிய தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, தமிழகத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். அதற்காக தமிழக அரசு வட்டாரத்திறற்கு ஒரு ஊராட்சியை தேர்வு செய்து ஊக்கப்படுத்த வேண்டும். அதிமுகவும், பாஜகவும் கூட்டணி என்ற ஒரே படகில்தான் பயணம் செய்கிறது. கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை.
மேலும், மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் திமுக அரசு காப்பியடித்து அதற்கு டப்பிங் செய்யப்பட்டு பெயர் மாற்றி வருகிறது. மேலும், கோமாரி நோய் தடுப்பூசியை மத்திய அரசு வழங்கவில்லை என்று மாநில அமைச்சர் பொய் சொல்லி வருகின்றார். அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான அளவிற்கு கோமாரி நோய் தடுப்பூசியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source:Puthiyathalamurai
Image Courtesy: Kathir