"பசு'க்களை கேலி பேசுவது தவறு" - பிரதமர் மோடி

Update: 2021-12-24 01:15 GMT

"பசுக்கள் பற்றி கேலி பேசுபவர்கள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை சார்ந்து உள்ளது என்பதை மறந்து விடுகின்றனர்" என பிரதமர் மோடி பேசியுள்ளார்.


கொரோனோ இரண்டாம் அலை சற்று ஓய்ந்த நிலையில் நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது மத்திய அரசு. அதன் அடிப்படையில் பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பனாஸ் டெய்ரி சங்குல்' திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டமானது தினமும் 5 லிட்டர் பால் பதப்படுத்த பயன்படும். இதன் மூலம் கால்நடைகள் வைத்திருப்போர்களுக்கும், அது சார்ந்த வியாபாரிகளுக்கும் மிகுந்த பயனுள்ள வகையில் இருக்கும்.

இது மட்டுமின்றி நேற்று மட்டும் வாரணாசியில் 22 திட்டங்களை மக்கள் பயன்படும் வகையில் 870 கோடி ரூபாய் மதிப்பில் பிரதமர் துவங்கியுள்ளார். பால் பதப்படுத்தும் திட்டத்திற்கான இடம் 30 ஏக்கர் அளவில் பிரம்மாண்ட முறையில் அமைந்துள்ளது.

இந்த திட்டத்தை துவங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, "பசுக்கள் மற்றும் எருதுகளை வைத்து கேலி பேசுபவர்கள், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை சார்ந்து உள்ளது என்பதை மறந்து பேசுகின்றனர்" என கூறினார். மேலும், "பசு நமக்கு தாய் மற்றும் புனிதமானது, சிலர் அதை பாவம் என்று கருதுகின்றனர்" எனவும் அவர் கூறினார்.


Source - Maalai malar

Similar News