ஒமைக்கிரான் தொற்று தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அதனை மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் அமல்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் தற்பொழுது ஒமைக்கிரான் தொற்று மெல்ல தலைதூக்க துவங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு உடனே சுதாரித்துக்கொண்டது. ஒமைக்கிரான் தொற்று தொடர்பாக மத்திய அரசு அவசரமாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதன் விளைவாக மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, "பண்டிகை காலத்தில் உள்ளூர் ஊரடங்குகளில் கவனம் செலுத்த வேண்டும். மாவட்டம் வாரியாக தொற்றை கண்டறிந்து விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மக்கள் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், இரவு நேர ஊரடங்கை தாமதமின்றி தொற்று அதிகம் உள்ள இடங்களில் அறிவிகக வேண்டும்" என அந்த சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், "தடுப்பூசிகள் செலுத்துவதில் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.