"சித்தார்த்துக்கு இதே வேலையா போச்சு" - தேசிய மகளிர் ஆணையத்தின் அடுத்த அதிரடி - சைலேந்திரபாபு'விடம் நெருக்கடி

Update: 2022-01-11 13:30 GMT

சாய்னா குறித்த ஆபாச பதிவு செய்த நடிகர் சித்தார்த் மீது தேசிய மகளிர் ஆணையம் சார்பிர் தமிழக காவல் துறை டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடம் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கைகள் பாயலாம்.


பஞ்சாப் விவகாரம் குறித்து ட்விட்டரில் பாட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் கண்டனம் தெரிவித்ததுடன் இதை செய்தவர்கள் கோழை என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சித்தார்த் சாய்னா'வின் ட்விட்'க்கு ஆபாச பதில் ட்விட் செய்தார். சாய்னா ஒரு பெண் எனவும் பாராமல் நாட்டிற்காக விளையாடிய விளையாட்டு வீராங்கனை என்றும் பாராமல் அரசியல் ஆர்வக்கோளாறு சித்தார்த் ட்விட் செய்தது தேசிய அளவில் அனைவரையும் கொந்தளிக்க வைத்தது. இதனை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

சித்தார்த் இது போல் நடப்பது முதல்முறையல்ல என தேசி மகளிர் ஆணையம் கொதித்துள்ளது. இது தொடர்பாக புகார் ஒன்றை தமிழக காவல் துறை டி.ஜி.பி'க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் தேசிய மகளிர் தினம் ஆணையத்தை சேர்ந்த ரேகா என்பவர். அக்கடிதத்தில் சித்தார்த் இதுபோல் பேசுவது வாடிக்கையாகி வருகிறது. இனிமேல் பெண்களை பற்றி பேசாத அளவிற்கு அவர் மீது கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேகா சர்மா குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரா டி.ஜி.பி, தமிழக டி.ஜி.பி ஆகியோரிடம் குவியும் புகார்களால் கடுமையான நடவடிக்கை பாயும் என தெரிகிறது.


Source - Asianet NEWS

Similar News