மாணவி தற்கொலையில் முன்கூட்டியே தீர்ப்பு எழுதிய தி.மு.க.,! சி.பி.ஐ. விசாரணை தான் ஒரே தீர்வு: அண்ணாமலை அதிரடி!
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வந்த கிறிஸ்தவ பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த இந்து மாணவி ஒருவர் மதமாற்றுவதற்கு வற்புறுத்தியதால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டர். அவரது மரணத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்வதற்கு திமுக முயல்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
மேலும், இது தொடர்பாக அண்ணாமலை பேசும்போது: மாணவி தற்கொலையில் முன்கூட்டியே திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் தீர்ப்பு எழுதிவிட்டு வந்து பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். இவர்கள் மாணவிக்கு மதமாற்றும் சம்பவம் நடைபெறவில்லை என்ற தோரணையில் பேசியுள்ளனர். இது போன்று சில மாணவர்களிடம் சென்று கல்வித்துறை சார்பில் விசாரணை செய்ததாகவும் அவர்கள் மதமாற்றும் செயல்களில் பள்ளி ஈடுபடவில்லை என்பது போன்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
ஆனால் மதமாற்றம் செய்வதற்கு பள்ளி நிர்வாகம் மாணவிக்கு கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இதனை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியிருக்கின்றனர். இதனால் கடைசி நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவமனையில் தனது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை மாணவி கூறியுள்ளார். அந்த வீடியோவில் மாணவி பேசியதை தவறாக சித்தரிக்க திமுக முயல்கிறது. எனவே இதன் காரணமாக மாணவியின் உறவினர்கள் சார்பாக நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கிறிஸ்துவ மதத்திற்கு மாணவியை மதம் மாறுவதற்கு கட்டாயப்படுத்தவில்லை என்று அமைச்சர் பேசுகிறார். இவர் முன்கூட்டியே தீர்ப்பு எழுதி வைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்துள்ளார் என்று தோன்றுகிறது. இது போன்று மாநில அரசு போலீசும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே இவர்களை நம்பினால் மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்காது. இதற்கு சிபிஐ விசாரணை மேற்கொண்டால் மட்டுமே மாணவியின் மரணத்திற்கு காரணம் தெரியவரும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar